மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மின்தகனசாலை அமைக்கும் பணிகள் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக இறந்த உடலங்களை எரிக்கும் மின் தகனசாலை அமைப்பதற்கான பணிகள் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மின்தகனசாலையினை அமைக்கும் பணிகள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம் மற்றும் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்,மாநகரசபையின் ஆணையாளர் மதிவண்ணன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,மாநகரசபை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

சுமார் மூன்று கோடி ரூபா செலவில் இந்த மின்தகன சாலை அமைக்கப்படுவதன் ஊடாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக நிலவிவந்த தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக குறித்த மின்தகன சாலையினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையிலும் அவை காலதாமதமான நிலையில் மீண்டும் இன்று அதன் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

புதியது பழையவை