அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்வதற்கு ஏதுவாக தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கல்வி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அரச ஊழியர் ஒருவர் தனது பதவிக்காலத்தில் உயர்ந்த பட்சம் 5 வருடங்கள் சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் தொழில் புரிவதற்கோ அல்லது வேறு பயனுறுதிவாய்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக அவர்களின் சிரேட்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதுள்ள விதிகள் திருத்தப்படும்.
அத்தகைய திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
