மட்டக்களப்பு லங்கா ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிராந்திய ஊடகவியலாளர்கள், பொலிஸார் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோருக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் கே.செல்வராசாவின் மேற்பார்வையில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க முன்னிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

