இலங்கையின் பொருளாதாரம் குறித்து அவசர சந்திப்பை மேற்கொள்ளும் பொருட்டு இந்திய வெளியுறவு செயலாளர் விநே மொஹான் வட்ரா தலைமையிலான குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
இன்று காலை அவர்கள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து உரையாடவுள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு அடுத்தகட்டமாக கிடைக்கப்போகும் இந்திய நிதியுதவிகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

