இரவு விடுதிகளில் விபச்சாரிகளுடன் சில அமைச்சர்கள் - பொன்சேகா பகிரங்க தகவல்

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள் ஹெரோயின் போதைப் பொருளை உட்கொண்டு இரவு விடுதிகளில் விபச்சாரிகளுடன் நேரத்தை செலவிடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்

தற்போதைய அமைச்சரவையால் தேசத்தைக் காப்பாற்ற முடியாது

தற்போதைய நாடாளுமன்றத்தில் உள்ள 50 வீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோசடி செய்பவர்கள். அதனால் இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்ற முடியாது.

தொலைநோக்குப் பார்வை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 வீதமானோர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிலர் ஹெரோயின் போதைப் பொருளை உட்கொண்டு இரவு விடுதிகளில் விபச்சாரிகளுடன் நேரத்தை செலவிடுகின்றனர். எனவே தற்போதைய அமைச்சரவையால் தேசத்தைக் காப்பாற்ற முடியாது.


புதியது பழையவை