துப்பாக்கிச்சூடு - இளைஞரொருவர் உயிரிழப்பு

வத்தளை - எலக்கந்த பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் இளைஞரொருவர் மீது துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட நபர் தப்பியோடியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை