கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த புகையிரதம் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி இருவர் அரியாலை பகுதியில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நேற்று (09)இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து காரணமாக சில மணி நேரம் புகையிரத பயணம் தடைப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி கொண்டவர்களையும் காரையும் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

