இலங்கை மின்சார சபையின் பொறியியளாலர்கள் சங்கம் – பணிபுறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

இலங்கை மின்சார சபையின் பொறியியளாலர்கள் சங்கம் பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

சுமார் 26 வருடங்களின் பின்னர் இவ்வாறு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம்  மூன்று கோரிக்கைகளின் அடிப்படையிலே  தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ம் ஆண்டின் 20 ம் இலக்க மின்சார சட்டத்தை திருத்துதல் மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கும்  போட்டி ஏல முறையை இரத்து செய்தல் மற்றும் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் தலைவரை பதவி நீக்கம் செய்யாமல் இருத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை