தாய்லாந்தில் இருந்து சீனியினை இறக்குமதி செய்யும் நிலையில், சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்குமென சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, சீனி கிலோ ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கலாமென இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது சந்தையில் சீனி கிலோ ஒன்று 265 ரூபா முதல் 300 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் சீனி மற்றும் சில அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியினை இந்தியா இடைநிறுத்தியுள்ளதன் காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் சீனி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியை இந்தியா இடை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தலையீடு செய்து சீனி ஏற்றுமதிக்கான தடையினை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சீனி இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
