வேப்பங்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வாகனங்கள் திருத்தம் மேற்கொள்ளும் நிலைய வளாக கிணற்றிலிருந்து இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலத்தினை நெளுக்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
வவுனியா நகர் பகுதியில் இயங்கும் தனியார் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான 50 வயதுடைய அழகர்சாமி விஜயகுமார் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று(21) மாலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

