முல்லைத்தீவில் - கரடி தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்காவில் காட்டுப்பகுதியில் விறகு வெட்ட சென்ற ஒருவர் கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொக்காவில் காட்டுப்பகுதியில் விறகு வெட்ட சென்ற ஒருவரையே இவ்வாறு இரண்டு கரடிகள் தாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் முறிகண்டி பகுதியைச் சேர்த்த 38 வயதுடைய சிவபாலகிருஸ்ணன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே படுகாயமடைந்த நிலையில் இன்று மாலை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர சிகிச்சையின் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதியது பழையவை