Qatar Charity நிறுவனத்தின் மீதான தடையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் Qatar Charity நிறுவன அதிகாரிகள் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த நிறுவனத்தின் மீதான தடையை நீக்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் நிறுவன அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் QatarCharity நிறுவனம் பயங்கரவாத நிறுவனமாக இலங்கை அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சம்பவங்களின் அடிப்படையில் இவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் கட்டாருக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது குறித்த நிறுவனத்தின் மீதான தடையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.