நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் வட மத்திய, மத்திய, ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாவதாற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
