நாட்டின் 27ஆவது பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம்

நாட்டின் 27ஆவது பிரதமராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு தற்போது கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது.
புதியது பழையவை