மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிய நேரத்தில் எரிபொருள் வழங்கப்படாமையால் பொதுமக்கள் விஷனம் தெருவிக்கின்றனர்.
நேற்று (22) பெற்றோல் முடிவடைந்து விட்டது என பல மணி நேரமாக காத்திருந்த பொதுமக்களிடம் கூறிவிட்டு இரவு 12 மணிக்கு பின்னர் இரகசியமாக கன்களில் எரிபொருள் வழங்கப்படும் போது பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டது.
வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் இடம்பெறும் இச் செயலை பிரதேசசெயலாளர் கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கண்டும் காணாதவாறு மௌனமாக இருக்கின்றீர்கள் இன்று(23) விவசாயிகளுக்கு வவுசரில் வந்த டீசல் ஒரு ஏக்கருக்கு 15 லீற்றர் என வரையறை உள்ள போதும் தற்போது 10 லீற்றர் மாத்திரமே வழங்கப்படுகின்றது.
வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக காத்திருந்தும் இன்று டீசல் வந்தது.



