அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜூலை 25 முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது, மாணவர்கள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைக்கு வருவார்கள் என்றும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்லைன் கற்றல் முறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து அதிபர்களுக்கும், மேலதிகமாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேசக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
