மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோது முச்சக்கரவண்டியுடன் மோதி, பின்னர் மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த கனரக வாகனத்தில் (லொறியுடன்) மோதிய வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்து மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் தன்னாமுனைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு சத்துரகொண்டான் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

