யாழ்ப்பாணத்தில் அரியவகை நட்சத்திர ஆமையொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
அரியாலை கிழக்கு பகுதியிலேயே இந்த ஆமை மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.