நாட்டில் எரிபொருளை விநியோக செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ‘தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்’ அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய வாராந்தம் உறுதிப்படுத்தப்பட்ட அளவு எரிபொருள் தொகை ஒவ்வொரு வாகன உரிமையாளர்களுக்கும் ஒதுக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், வாகன இயந்திர இலக்கம் மற்றும் வாகன உரிமையாளர் தொடர்பான விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் QR குறியீடு ஒதுக்கப்பட்டு ‘தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்’ வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
