IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.
லங்கா ஐ.ஓ.சியின் திருகோணமலை முனையம் எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை அனுப்ப 24 மணி நேரமும் இயங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக எரிபொருள் விநியோகத்தை முற்றுமுழுதாக நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோக சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.
