மட்டக்களப்பு நகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கர்பிணித் தாய்மார்கள் மற்றும் கடுமையான நோயாளர்களுக்கும் துரிதகதியில் பெற்றோல் வழங்கப்படுவதாக (திங்கட்கிழமை) எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் எம்.செல்வராசா தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றபோதிலும் மட்டக்களப்பு லங்கா ஐஓசீ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எவ்வித தடைகளுமின்றி எரிபொருள் வினியோகம் சீரான முறையில் நடைபெற்று வருகின்றது.

