ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாளை 16 ஆம் திகதி சனிக்கிழமை பாராளுமன்றத்தை கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் இன்று கூடவிருந்த போதிலும் ஜனாதிபதியின் இராஜினாமா தாமதம் காரணமாக அது நடைபெறவில்லை. இதே நேரம், இன்று இடம்பெறும் கட்சி தலைவர் கூட்டத்தில் புதிய பிரதமரின் பெயர் முன்மொழியப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
