ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை உத்தியோகப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ராஜினாமா கடிதத்துக்கு அமைய நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி பதவி விலகியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி பதவி விலகியுள்ளமையின் காரணமாக அவரின் கடமைகளை பிரதமர் முன்னெடுப்பார் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
