யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வ சந்நிதியில் ஆரம்பமான கதிர்காம பாதயாத்திரை நேற்று(04) மாலை மட்டக்களப்பினை சென்றடைந்துள்ளது.
இதைனையடுத்து இன்று(05) காலை கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.
கடந்த மாதம் 04 ஆம் திகதி செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளை தொடர்ந்து பாதயாத்திரை ஆரம்பமானது.
இம்மாதம் கதிர்காமத்தின் கொடியேற்றம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த பாதயாத்திரை கதிர்காமத்தினை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்த பாத யாத்திரை குழுவினர் இன்று காலை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள்,கூட்டு பிரார்த்தனைகளை தொடர்ந்து கதிர்காமம் நோக்கி தமது பாதயாத்திரையினை ஆரம்பித்துள்ளனர்.



