மட்டக்களப்பு - வவுணதீவு வலையிறவுப் பாலத்தருகில் கனரக வாகனம் ஆற்றில் வீழ்ந்து விபத்து

மட்டக்களப்பு - வவுணதீவு வலையிறவுப் பாலத்தருகில் கனரக வாகனம் ஒன்று வீதியைவிட்டு விலகி வலையிறவு ஆற்றில் வீழ்ந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியால் இரண்டு கனரக வாகனங்கள் சென்ற நிலையில் ஒன்றை மற்றொன்று முந்திச் செல்ல முற்பட்ட போது இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

எனினும் வாகனத்தில் இருந்த சாரதியும் நடத்துனரும் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளனர்.

வவுணதீவு காவல்துறையினர் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதியது பழையவை