இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் – அமெரிக்கா

இந்த நேரத்தில் இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் பதிவில், அனைத்துத் தரப்பினரும் தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை அணுகி, நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் தீர்வுகளை விரைவாக நடைமுறைப்படுத்த பாடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து வன்முறைகளையும் கண்டித்ததோடு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகார பரிமாற்றம் அவசியமானது.

பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, ஜனநாயக நிர்வாகம் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான மக்களின் கோரிக்கைகளை ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்தின் மூலம் மாத்திரமே அடைய முடியும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை