புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா தயார்

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜீலி சங்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜீலி சங்க் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதியது பழையவை