39 ஐபோன்கள், 3 கிலோ தங்கத்துடன் ஆறு பேர் கைது

3 கிலோ கிராம் தங்கம் மற்றும் 39 ஐபோன்கள் வைத்திருந்த 6 பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை டுபாயிலிருந்து நாட்டிற்கு வந்த ஆறு நபர்களும், சுங்கத்துறையினூடாகச் சென்ற போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்கள் தங்கத்தின் ஒரு பகுதியை அணிந்து கொண்டு மீதியை ஐபோன்களுடன் சாமான்களில் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் அக்குறணை, நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் 40 மற்றும் 51 வயதுடையவர்களாவர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை