சிறப்பாக பணியாற்றிய - யாழ் மாநகர சபை ஊழியர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி வைப்பு!

கடந்த 2 ம் திகாரி தொடக்கம் இன்று வரை வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய இவ்வருடமகோற்சவம் சிறப்பாக இடம் பெற்றிருந்தது நல்லூர் உற்சவ காலத்தில் சிறப்பாக கடமையாற்றிய யாழ் மாநகர சபை பணியாளர்களுக்கு இன்று நல்லூர் கந்தப்பெருமானின் ஆசீர்வாதம்வழங்கிவைக்கப்பட்டது.

இன்று காலை 10 மணிக்கு நல்லூர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று மாநகர சபை ஊழியர்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று ஆசீர்வாதம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர துணை முதல்வர் மற்றும் மாநில சபை உறுப்பினர்கள் மாநில சபை பணியாளர்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

புதியது பழையவை