குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில்

பசறை பகுதியில் 22 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கான 22 பேரில் இருபது பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பசறை தமிழ் வித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடதக்கது.
புதியது பழையவை