சீனாவின் உளவுத்துறை கப்பல் - இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் சீமான் எச்சரிக்கை

சீனாவின் உளவுத்துறை கப்பல் இலங்கையில் அரசாங்கத்தின் அனுமதியுடன் நிலைகொள்ள இருப்பது இந்திய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில்,“சீனாவின் உளவுத்துறை கப்பல் இலங்கையில் அரசாங்கத்தின் அனுமதியுடன் நிலைகொள்ள இருப்பது இந்திய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல். இந்த விவகாரத்தில் ஆளும் பாஜக அரசு தமது வலிமையான எதிர்பினை பதிவு செய்யாமல் அமைதியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது”என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை