ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று இன்று இரவு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இரவு 7மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வகட்சி ஆட்சி அமைப்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
