நாட்டில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
