பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் நிதி ஒதுக்கீட்டில் - விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் இயங்கிவரும் விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (19) திகதி இடம்பெற்றுள்ளது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கலந்துகொண்டிருந்ததுடன், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் நிதி ஒதுக்கீட்டில் பிரதேச செயலகத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணத் தொகுதிகள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர், திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
புதியது பழையவை