மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு தொகை ஜிபிஎம்ஜி துப்பாக்கியின் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர், கோட்டைமுனை பகுதியிலேயே இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
புதைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட தோட்டாக்களே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
ஜிபிஎம்ஜி துப்பாக்கியின் 570 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

