கல்முனை பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை

அம்பாறை - கல்முனை பிரதேசத்தில் கட்டாக்காலி 
மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வீதியில் பயணிப்போர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். 

கல்முனை மாநகர சபை இவ்கட்டாக்காலி மாடுகளின் தொல்லையை இல்லாதொழிப்பதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

அண்மைக்காலமாக கல்முனை நகர் பகுதி அதனை அண்டிய பிரதேசங்களிலும் கட்டாக்காலி மாடுகள் 
அங்கும் இங்குமாக நடமாடிவருகின்றது. 

வீதியின் நடுவில் படுத்துறங்குவதும், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிற்பதுமாக மாடுகள் அலைவதனால் வாகனங்களில் பயணிப்போர் மிகுந்த அசௌகரியங்களுக்குள்ளாகி வருவதுடன், விபத்துக்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். 

அத்துடன் பாதையோரங்களில் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், 
முதியோர்கள் இக் கட்டாக்காலி மாடுகளால் ஆபத்துக்களையும் சந்தித்து வருகின்றனர். 

கடந்த காலங்களிலும் கல்முனை மாநகர சபையினால் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை