உலக வங்கியின் நிதி அணுசரணையுடன் - மட்டக்களப்பில் சந்தை கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியில் சந்தை கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இன்று இடம் பெற்றது.

உலக வங்கியின் 5 மில்லியன் ரூபாய் நிதி அனுசரணையுடன் சந்தை கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

பொது மக்களின் நலன் கருதி அவர்கள் பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் நோக்குடனும், வியாபாரிகள் தமது பொருட்களை பாதுகாப்பாக விற்பனை செய்யவும் குறித்த சந்தை கட்டிடம் பயனுள்ளதாக அமையும்.

இந்த அடிக்கல் நடும் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் நா.மதிவண்ணன், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

புதியது பழையவை