நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள கொரோனா மரணங்கள்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 167 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த தொற்றாளர்கள் நேற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நான்காவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்காக நடமாடும் சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கபட்டுள்ளது.

தேவையான அளவு இவ்வாறு நடமாடும் சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
புதியது பழையவை