இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணைக்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டு
கொழும்பு, லங்கா வங்கி மாவத்தையில் கடந்த மே மாதம் 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஜோசப் ஸ்டாலினின் கைது சட்டப்பூர்வமானது! ரணில் விக்ரமசிங்க
இம்மாதம் 3ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அவர் இருந்தபோது கொழும்பு - கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

