அம்பலாங்கொடை தெல்துவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்துவ பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஐவர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர்களில் நேற்றைய தினம் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
