1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சட்டத்திற்கமைய மாலை 6 மணிக்குப் பின்னர் பெண்களை மட்டுப்படுத்தப்பட்ட தொழில்களில் மாத்திரம் பணிக்கமர்த்த முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெண்களை இரவு வேளைகளில் தொழிலில் அமர்த்துவது தொடர்பாக தற்போது காணப்படும் வரையறுக்கப்பட்ட சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
