சீன கண்காணிப்பு கப்பல் யுவான் வாங் - 5 (Yuan Wang 5) ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசால் வழங்கபட்ட அனுமதிக்கிணங்க இன்று முதல் 07 நாட்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் குறித்த கப்பல் நங்கூரமிட்டுள்ளது.
இலங்கை - இந்திய எதிர்ப்பையும் மீறி குறித்த கப்பலானது இலங்கையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடற்பரப்பிற்கு வருகை தந்தது,
இதனை அடுத்து இலங்கை இந்திய அதிகாரிகளிடம் குறித்த கப்பலின் வருகையை எதிர்ப்பதற்கான காரணத்தை விளக்குமாறு கோரியிருந்த போதும் இந்திய அதிகாரிகளிடமிருந்து உறுதியான பதில் கிடைக்காத காரணத்தினால் குறித்த கப்பலின் வருகைக்கான அனுமதியை இலங்கை வழங்கியுள்ளது.
இதனை அடுத்தே குறித்த கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
