அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த - கிழக்கு மாகாண ஆளுநர்

அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் பொதுமக்கள் சந்திப்பு நேற்று (24) அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யம்பதிடம் முன்வைத்திருந்தர்.

இதன்போது, சில பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்ட அதேவேளை, ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கி அதுதொடர்பிலான நடவடிக்கையினை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளருக்கு பணிப்புரை வழங்கி வைத்தார்.


புதியது பழையவை