ஹட்டன் - வனராஜா சமர்வீல் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய நிலையில் சிறுத்தையொன்று இன்று காலை பிரதேசவாசிகளால் இனங்காணப்பட்டுள்ளது.
ஆறு அடி நீளம் கொண்ட குறித்த சிறுத்தை மரத்தில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைத் தந்ததுடன் சிறுத்தையை பிடிப்பதற்காக நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த பகுதியில் அடையாளம் தெரியாதவர்களால் விரிக்கப்பட்ட வலையிலிருந்து தப்பிப்பதற்காகவே சிறுத்தை மரத்தில் ஏறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

