மஸ்கெலியா பகுதியில் நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஸ்சப்பான எமில்டன் தோட்டத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட 18 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று காலை 11 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான 18 பேரும் மஸ்கெலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது