மணப்பெண்ணை அழைத்து சென்ற கார் விபத்து

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் திருமண வீட்டிற்கு சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச்சென்ற காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கார் வீதியை விட்டு விலகிமையாலே விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் காரில் சென்றவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேரவில்லை என கூறப்படும் நிலையில் கார் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து இன்னுமொரு வாகனத்தை ஏற்பாடு செய்து மண்டபத்தை சென்றடையும் வரை மணப்பெண் மற்றும் உறவினர்கள் வீதியில் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வீதியை விட்டு விலத்தி வடிகாலுக்களுக்குள் இறங்கிய நிலையில் காருக்குள் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் சாரதி உட்பட எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை