ஜெனிவாவில் விரட்டப்பட்ட ரெலோவின் ஊடகப் பேச்சாளர்

ஜெனிவாவில் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் இனப்படுகொலைக்கு நீதி கேட்டவர்களால் விரட்டியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(14.09.2022) ஜெனிவாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐ.நா சபைக்கு முன்பாக 3வது நாளாக இனப்படுகொலைக்கு நீதி கோரி, புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஜெனிவா முன்றலில் கண்காட்சியும், போராட்டமும் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் குறித்த பகுதிக்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி வழங்குவதற்காக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் சென்றிருந்தார்.

இதன்போது எமது இனப்படுகொலை சான்றுகளை பார்வையிடுமாறு அங்கிருந்த மக்கள் கோரிய போது, அது தமக்கு தெரியும் என சுரேந்திரன் குருசாமி தெரிவித்திருந்தார்.


இதனையடுத்து அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. 13 வது திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஜெனிவா வர வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குருசாமி சுரேந்திரன், அதனை நடைமுறைப்படுத்தி சமஸ்டி ஆட்சிமுறையை நோக்கி நகர முடியும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் மக்கள் அவர் மீது இனப்படுகொலைக்கு எதிராக இருந்தால் வாருங்கள் இல்லாவிடின் ஐ.நா பக்கம் வர வேண்டாம் எனவும், இதனை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவிக்குமாறும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு கேட்கப்பட்ட கேள்விக்களுக்கு பதில் அளிக்க முடியாத குருசாமி சுரேந்திரன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியில் இனப்படுகொலை கண்காட்சியை நடத்தி வரும் நபரொருவர் கருத்து தெரிவிக்கையில்,
“இனப்படுகொலைக்கு நீதி கோரி 10 ஆண்டு காலமாக நாங்கள் இங்கு இருகின்றோம். இங்கு கொல்லப்பட்ட மக்களின் படங்களை மூன்று நாட்களாக காட்சிப்படுத்தியுள்ளோம்.

சுரேந்திரன்  குருசாமி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி வழங்குவதற்காக இங்கு வந்துள்ளார். அப்பொழுது அவரை எமது இனப்படுகொலை சாட்சியங்களை பார்வையிடுமாறு அழைத்தோம்.

அவர் இதெல்லாம் எங்களுக்கும் தெரியும் என்றார். போர் நடக்கும் காலத்தில் அரைவாசி காலம் இவர் வெளிநாடுகளில் வாழ்ந்தார்.

ஆட்கடத்தல் மற்றும் போராளிகளுக்கு எதிராக செயற்படல் போன்ற ஆயுத குழுவுடன் செயற்பட்டார். இன்று ரெலோவுக்குள் பேச்சாளர் ஒருவர் இல்லை.
ரெலோ செல்வோருக்கு போதியளவு ஆங்கில அறிவு இல்லை. அப்பொழுது ஒரு ஊடகப் பேச்சாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

ஆனால் இவர், சிறிகந்தா, சிவாஜிலிங்கம், சுரேஸ் பிறேமச்சந்திரன் போன்றோருடன் இணைந்து 13 வது திருத்தச் சட்டம் எனச் சொல்லிக் கொண்டு, எல்லோரும் கையெழுத்திட்டு மோடிக்கு கடிதம் கொடுத்தார்கள்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் 1987 உடன் முடிந்து விட்டது. இந்திய இராணுவம் ஒன்றும் செய்ய முடியாது தோற்று போனது.
இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். அப்பொழுது இந்திய இராணுவத்தினுடன் ஒட்டுக் குழுவாக இருந்தீர்கள்.

இவ்வளவு மக்களையும் காட்டி கொடுத்தீர்கள். தமிழ்த் தேசிய  கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதனுள் இணைந்து கொண்டீர்கள்.

நீதிக்காக ஒரே கொள்கையாக நாம் 10 வருடமாக போராடுகிறோம். பெட்டியில் காசு வாங்கி செயற்படுகிறார்கள்.
13 வது திருத்த சட்டம், இலங்கை - இந்திய ஒப்பந்தம் என நாடகம் போடுகிறார்கள். அதில் எதுவும் உண்மை இல்லை.

மேயர் மணிவண்ணன் கூட ஆளுனரின் அனுமதியின்றி இங்கு வர முடியது. இருப்பினும் 13 வது திருத்தச் சட்டத்தை காவிக் கொண்டு, இவர் நாடு நாடாக செல்கிறார் ”என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை