தேசிய பாதுகாப்பு சட்டம் என்பது பயங்கரவாத தடைச் சட்டத்தின் மறுபெயர்

தேசிய பாதுகாப்பு சட்டம் என்பது பயங்கரவாத தடைச் சட்டத்தின் மறுபெயர் என இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக விரிவான தேசிய பாதுகாப்பு சட்டத்தை இலங்கை கொண்டு வரும் என வௌிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளமையை அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மறுபெயரே தவிர, அதில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை.

தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வருவதன் நோக்கம், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டதாக சர்வதேசத்தை ஏமாற்றி, அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க முடியாதபடி பலமான அரணையும் நிறுவிக்கொள்வதாகும் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை