இலங்கையில் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட முதலாவது வீடு

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வியத்புர வீடமைப்புத் தொகுதியிலிருந்து நேற்று (27) குறித்த வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வீட்டிற்காக அவர் 40,000 டொலர்களை செலுத்தியதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டொலரில் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை