உலக சுற்றுலா தின நிகழ்வு - அம்பாறை அறுகம்பேயில்

சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் மற்றும் அம்பாறை மாவட்ட செயலகம் ஆகியவைகளின் ஒத்துழைப்புடன் உலக சுற்றுலா தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 29 ம் திகதி அறுகம்பேயில் மிக விமரிசையாக சுற்றுலா தின நிகழ்வுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக கொரோனா, சஹ்றான் தாக்குதல், மற்றும் அரசியல், பொருளாதார பின்னடைவுகளால் சுற்றுலாத் துறையில் பின்னடைவு ஏற்பட்டதுடன் சுற்றுலா தொழிலை தமது ஜீவனோபாயமாக நம்பியிருந்த பெருவாரியானோர் முற்றாகவே பாதிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது படிப்படியாக நிலைமை சீரடைந்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளை மேலும் வரவழைக்கும் வகையில் கடமையிலுள்ள முப்படையினர் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் சமூக சேவா அமைப்புகள் போன்றவைகளின் ஒத்துழைப்புடன் கடற்கரைபிரதேசத்தை குறிப்பாக ‘சேர்ப்பிங்’ பிரதேசங்களை துப்பரவுசெய்யும் பணிகளில் ஈடுபட்டு கழிவுகளற்ற பிரதேசமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பே பிரதேசம், கூமுனை வனவிலங்குகள் சரணாலம்,பாணம கடற்கரை மற்றும்
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முகுது மகா விகாரை, மகுல் மகா விகாரை, குடும்பிகல, எலிபன்ட் ராக், விஸ்கி பாயிண்ட், போன்ற இடங்கள் சுற்றுலாத்துறைக்கு ஏற்ற இடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை